முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை அனுப்பியது சீனா

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      உலகம்
China 2023-05-30

Source: provided

பெய்ஜிங் : தனது சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை சீனா அனுப்பி வைத்துள்ளது. 

சீனா, விண்ணில் தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. டியாங்காங் என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 6 பேர் வரை தங்கலாம். இங்கு சீன விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டனர். 

இந்த நிலையில் சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு நேற்று 3 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் சீனாவின் பொதுமக்களில் ஒருவரும் அடங்கும். லாங் மார்ச்-2 எப் ராக்கெட்டில் ஜிங் ஹய்பெங், ஜுயங்ஜு, குய் ஹய்ச்சவ் ஆகிய 3 வீரர்கள் விண்ணுக்கு புறப்பட்டனர். 

இந்த ராக்கெட் வடமேற்கு சீனாவில் உள்ள கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கை கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பெய் ஹாங் பல்கலைக்கழக பேராசிரியர் குய் ஹய்ச்சவ் விண்வெளிக்கு சென்ற முதல் சீன குடிமகன் என்ற சிறப்பை பெற்றார். 

ஷென்சோ-16 விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள இந்த மூன்று வீரர்களும், கடந்த நவம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்துக்கு வந்த 3 பேர் கொண்ட குழுவினர் மாற்றாக விண்வெளி நிலையத்தில் இடம் பெறுவார்கள். அவர்கள் 5 மாதங்கள் தங்கி ஆய்வு பணியை மேற்கொள்வார்கள். 

இதற்கிடையே வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இது குறித்து சீன விண்வெளி ஆய்வு மைய பிரிவு இணை இயக்குனர் லின் ஷிகியாங் கூறும் போது, 

2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கு சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமின்றி, வேற்று கிரகத்துக்கு மனிதர்களை அழைத்து செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து