எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.
இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது. இந்த நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. 90 நிமிடங்கள் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராணுவம் எடுத்த நடவடிக்கை தொடர்பக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் ராஜ்நாத்சிங் ராணுவம் எடுத்த நடவடிக்கை எடுத்த குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக ராஜ்நாத்சிங் கூறினார். லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


