எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தன. இந்திய படைகளின் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய கிராமங்களில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, அத்துமீறலில் ஈடுபட்டது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படைகள் நடத்திய கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவீச்சு தாக்குதலில் இதுவரை 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல்களின் விளைவாக பூஞ்சில் 44 பேர் உட்பட மொத்தம் 59 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கிய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் தீவிரமான பீரங்கி மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் (மே 7ம் தேதி) மற்றும் நேற்று (8 ஆம் தேதி)களின் இடைப்பட்ட இரவில், ஜம்முவில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, உரி மற்றும் அக்னூர் செக்டார்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி தூண்டுதலற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


