முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024 ஐ.பி.எல். போட்டியிலும் விளையாடுகிறார் டோனி : சி.எஸ்.கே. ரசிகர்கள் மகிழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 30 மே 2023      விளையாட்டு
Dhoni-1 2023-05-30

Source: provided

அகமதாபாத் : ரசிகர்களின் அன்புக்கு பரிசளிக்கும் விதமாக அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி கூறியுள்ளார். டோனியின் இந்த அறிவிப்பு சி.எஸ்.கே. ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

த்ரில் வெற்றி...

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

கடினமானதாக இருக்கும்...

இந்த வெற்றிக்கு பிறகு டோனி பேசுகையில், “எனது ஓய்வை அறிவிக்க சரியான தருணமாக இது உள்ளது. இந்த போட்டியோடு விடைபெறுவது எளிதாக இருந்திருக்கும். அடுத்த 9 மாதங்கள் பயிற்சி செய்து இன்னொரு சீசன் விளையாடுவது கடினமானதாக இருக்கும். ஆனால், இந்தாண்டு நான் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் என்மீது காட்டிய அன்புக்கு நான் இன்னொரு சீசன் விளையாடுவது பரிசாக இருக்கும். எனது உடல் தகுதியை பொறுத்து முடிவெடுப்பேன்.

மகிழ்ச்சியாக இருப்பார்...

ரஹானே போன்று அனுபவமிக்க வீரர்கள் அணியில் இருப்பதால், இளம் வீரர்கள் அவர்களிடம் மனம்விட்டு பேச முடிகிறது. ராயுடுவின் சிறப்பு என்னவென்றால் களத்திற்கு வந்தால் 100 சதவிகிதம் கொடுக்க விரும்புவார். இந்திய அணிக்காக விளையாடும்போது இருந்து அவரை தெரியும். வேகப்பந்து மற்றும் சுழல் பந்துவீச்சை நன்றாக விளையாட கூடியவர். ஒய்வுக்கு பிறகு வாழ்வின் அடுத்த கட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார் என நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து