முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 5-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை : மேட்டூர் அணை  வரும் 12-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.  

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். அணைகளில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக கூட திறக்கப்படும். சில நேரங்களில் காலதாமதமாகக் கூட திறக்கப்படும். 

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூா் அணையை ஜூன் 12-ம் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து,  வரும் 12-ம் தேதி மேட்டூா் அணை  திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

வரும் 11-ம் தேதி சேலத்திற்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 12-ம் தேதி மேட்டூா் அணை திறந்து வைக்க உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தில் புதிதாக ரூ. 1,000 கோடியில் திட்டங்களை அறிவிக்க உள்ளாா் என்று தகவல்கள் வெளியானது. 

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். 

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை வரும் 5-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின். ஆய்வு செய்கிறார். வரும் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாக முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 6 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து