முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த 1,257 பேர்

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      இந்தியா
Coromandel-1 2023-06-03

Source: provided

புவனேஸ்வர் : விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்து நேற்று முன்தினம்  இரவு 7 மணிக்கு நிகழ்ந்தது. 

இதில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேரும், யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,039 பயணிகளும் முன்பதிவு செய்து பயணம் செய்து இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து