முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணத்தில் திடீர் மாற்றம்: இன்று தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2023      தமிழகம்      அரசியல்
Amit-Shah 2023 04 09

சென்னை, மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 10) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மையக்குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை (ஜூன் 11) மதியம் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். 

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 11) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அந்த பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இன்று அவர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்த இரண்டு நாள்களில் 4 மாநிலங்களில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் நாளை (ஜூன் 11) பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜகவின் அரசியல் திட்டங்கள் குறித்தும், அரசியல் கூட்டணி குறித்தும் அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்தில் இன்று (ஜூன் 10) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார். ஆந்திரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக தமிழகத்தின் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து