முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரை மணி நேரத்தில் நிறைவடைந்த புதுவை சட்டப் பேரவைக்கூட்டம்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கிய அரை மணி நேரத்தில் நேற்று  நிறைவு பெற்றது. 

புதுவை சட்டப்பேரவை கூட்டம்  நேற்று காலை சபாநாயகர் ஆர். செல்வம் தலைமையில் நடைபெற்றது.  முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நலக் குறைவால் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டம் தொடங்கியவுடன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதையடுத்து புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசை பாராட்டியும், சந்திரயான் -3 விண்கலம், ஜி-20 மாநாடு வெற்றிகரமாக நடத்தியதற்கு மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி இழப்பை தடுத்தல் மற்றும் சேவை வரி தொடர்பான மூன்று சட்ட முன் வரைவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டும் என தி.மு.க. உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் அரை மணி நேரத்தில் பேரவைக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து