முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய விளையாட்டு; வங்காளதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2023      விளையாட்டு
Sports-1

Source: provided

ஹேங்ஜவ்:ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) சீனாவில் நடைபெறுகிறது. சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற க்ரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை நேற்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. எனவே, இன்றைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

ஆட்டத்தின் முதற்பகுதியில் கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை இந்தியா கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது. ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஒரு ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு ஒரு பெனால்டி ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார். இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து