முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிவாரண்டு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      உலகம்
Lee-Jae-myung 2023-09-22

Source: provided

சியோல் : தென்கொரியாவில் எதிர்க்கட்சி தலைவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. 

தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் தலைவராக லீ ஜே-மியுங் உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலைய கழிவுநீரை கடலில் கலக்கும் திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் கடந்த 3 வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். 

இதற்கிடையே லீ மீது ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் அங்கு பாராளுமன்ற கூட்டத்தொடர் கூடியது. இதனால் அவர் மீது பிடிவாரண்டு பிறப்பிக்க பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

அதில் இவருக்கு எதிராக பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்ததால் இவரை கைது செய்ய தென் கொரிய அரசாங்கம் பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. எனினும் தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை லீ முற்றிலும் மறுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து