முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலக்கு என்பது கிடையாது: மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      தமிழகம்
Thangam 2023 04 05

Source: provided

சென்னை L மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க முடியாமல் போன பெண்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் என்றும், மேல்முறையீடு செய்ய அளிக்கப்பட்டுள்ள அவகாச காலத்திலேயே புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளையொட்டி மகளிர் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைத்தார். 

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது. 

இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளும், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் உரிமைத் தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதோர் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டிருக்க கூடிய அதே கால அவகாசத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இவ்வளவு பயனாளிகள் என்ற இலக்கு கிடையாது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து