முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.சி.க. தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Thirumavalavan 2023-09-26

சென்னை, வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை வந்த அவர், முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார். வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்று கொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார். உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்து விட்டது. 

இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து