எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக 2018 மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து உருவான திரைப்படம் 2018. இதில், டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிக் அபு, வினீத் ஸ்ரீனிவாசன், நரேன், லால் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது.
இடுக்கி அணை திறக்கப்பட்டபோது ஏற்பட்ட வெள்ளச்சேதத்தில் இளைஞர்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதை தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப்.
கேரளத்தில் மே 5-ம் தேதி வெளியான இப்படம் உலகளவில் ரூ. 180 கோடியை வசூலித்ததாகவும் கேரளத்தில் மட்டும் ரூ. 89 கோடி வசூலைக் குவித்தாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகருக்கான செப்திமிஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விருதுகளில் ஒன்றாக கருதப்படும் இவ்விருது தனக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த விருதை கேரளத்திற்கு சமர்பணம் செய்வதாகவும் நடிகர் டோவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 2018 திரைப்படம் அதிகாரப்பூர்வமாக இந்தியா சார்பில் 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |