Idhayam Matrimony

மேட்டுப்பாளையத்தில் இன்று நடக்கவிருந்த அண்ணாமலையின் நடை பயணம் வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
Annamalai 2023-08-21

Source: provided

கோவை : மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறவிருந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் மிலாடி நபி பண்டிகையையொட்டி அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று மேட்டுப்பாளையத்தில் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது மேட்டுப்பாளையம் நடைபயண நிகழ்ச்சி அக்டோபர் 4-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது:- 

இன்று மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இன்று மேட்டுப்பாளையத்தில் மிலாது நபி ஊர்வலம் நடக்க உள்ளது. அன்றைய தினம் நாமும் நடைபயணம் மேற்கொண்டால் போக்குவரத்து இடையூறு ஏற்படும் என கட்சி நிர்வாகிகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

அதனை ஏற்று என் மண், என் மக்கள் யாத்திரை நடைபயணம் அக்டோபர் 4-ம்  தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் மக்களை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து