முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      விளையாட்டு
Babar-Assam 2023-09-27

Source: provided

லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:- ஒரு அணியாக எங்களது மனவலிமை உயர்ந்த நிலையில் இருக்கிறது. நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். களத்தில் சாதிக்க எங்களுக்காக பிரார்த்திக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். 

நாங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடியதில்லை. அங்குள்ள சீதோஷ்ண நிலை, ஆடுகளத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளோம். மற்ற ஆசிய நாடுகளில் உள்ளது போன்ற சூழல் தான் இந்தியாவில் இருப்பதாக அறிகிறோம். அதற்கு ஏற்ப தயாராவோம். 

உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பது கவுரவமாகும். டாப்-4 இடத்திற்குள் வர வேண்டும் என்பது சிறிய இலக்குதான். சாம்பியனாக தாயகம் திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதை நிறைவேற்றுவோம் என்று நம்புகிறேன். ஆமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் முன் விளையாட இருப்பது பரவசமூட்டுகிறது. எனது திறமைக்கு ஏற்ப மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்தாலும் அதில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து