முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      உலகம்
Dengue-fever 2023 06 20

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். 

லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1,511 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். பாகிஸ்தானில் நேற்று  முன்தினம் ஒருநாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தாண்டு 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது. 

நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ராவல்பிண்டியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 70 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். பலர் நோயின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் வீடுகளிலிருந்து கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து