எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஓ.டி.டி. தளங்களில் உள்ள பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை உடனடியாக நீக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளைக் குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால், ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதாவது, அனைத்து ஓ.டி.டி. தளங்களிலும் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்களை மத்திய அரசு தடை செய்துள்ளது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசப் பாதுகாப்பு நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


