Idhayam Matrimony

பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு

வியாழக்கிழமை, 8 மே 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்தியாவில் உள்ள 15 நகரங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாகவும், பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  பேசிய கர்னல் சோபியா குரேஷி, "ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தான் ஏவுகணைகளை இந்தியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு நடுவானிலேயே தடுத்து தாக்குதலை முறியடித்தது. பாகிஸ்தான் நடத்த இருந்த ஏவுகணை, டிரோன் தாக்குதல்கள் தோல்வியடைந்தன" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி  கூறியதாவது;-

லாகூரில் உள்ள வான் பாதுகாப்பு கட்டமைப்பை இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்தது. பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை. அதே சமயம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 16 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதிச்சடங்கு நடந்துள்ளது.  பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு மத வழிபாட்டு தளங்களையும் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.  இந்தியாவின் நோக்கம் பயங்கரவாதிகளை தாக்குவது மட்டுமே, மக்களை அல்ல. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி தரப்படும்.

இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது. இந்தியாவின் பதில் நடவடிக்கை மீது வகுப்புவாத சாயம் பூச பாகிஸ்தான் முயற்சிக்கிறது.  சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தான் மீறியது. சிந்து நதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் இல்லை. கொடூர தாக்குதலுக்கு ஆளான இந்தியாவின் பதிலடிக்கு உலக தலைவர்கள் மதிப்பளித்துள்ளனர்."

இவ்வாறு விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து