முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சானூர் கோவிலில் பஞ்சமி தீர்த்த உற்சவம் : லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2023      ஆன்மிகம்
Padmavati 2023-11-18

Source: provided

திருப்பதி : திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நேற்று பஞ்சமி தீர்த்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். 

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பந்தர்களுக்கு அருள்பாலித்தார். 

விழாவின் சிகர நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் நேற்று நடைபெற்றது. பஞ்சமி தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவ தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக திருக்குளத்தை அடைந்தார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், தீர்த்தவாரி நடைபெற்றது. 

சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், அதிகாரிகள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் திருக்குளத்தில் புனித நீராடினர்.

கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புரணம். எனவே, தாயார் அவதரித்த புனித பஞ்சமி தினத்தில், அவர் அவதரித்த அதே திருக்குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து