முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகும் துருவ நட்சத்திரம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      சினிமா
Dhruva-Nakshatra 2023-11-21

Source: provided

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் படம் பல இன்னல்களுக்கு பிறகு இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. இப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், இந்நிலையில், படத்தின் வெளியீடு பற்றி பேட்டியளித்த கௌதம் மேனன், துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன்,  ஆனால் சில காரணத்தால் அவர் நிராகரித்துவிட்டார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்து இருந்தது ஆனால் அவரால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக விக்ரம் இந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டார் என்று கூறினார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் படத்தின் ஷூட்டிங் பணிகள் தாமதமானது. பின்னர் நிதி நெருக்கடியை ஓரளவுக்கு சரிசெய்து மீண்டும் படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்த நிலையில், துருவ நட்சத்திரம் இப்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து