முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கியது ஆந்திர ஐகோர்ட்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
chandrababu-naidu

ஐதராபாத், திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, “சந்திரபாபு நாயுடு நவம்பர் 28-ஆம் தேதி வரையில் இடைக்கால ஜாமீனில் இருக்கிறார். அவருக்கு தற்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.” என்று கூறினார். 

முன்னதாக, உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீனை அடுத்து, 53 நாட்கள் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் இருந்த சந்திரபாபு நாயுடு அக்டோபர் 31-ஆம் தேதி ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியில் வந்தார். ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுவை மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதனையடுத்து சந்திரபாபு நாயுடுக்கு வலது கண்ணில் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஜாமீன் கோரி அவரது வழக்குரைஞா்கள் ஆந்திர உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, ‘மனுதாரரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, மனிதாபிமான கண்ணோட்டத்துடன் 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை அவா் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனா்.

அதேபோல், ஜாமீன் காலம் முடிந்து ராஜமகேந்திரவரம் சிறைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் நவம்பர் 28-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடு ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து