முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.எஸ்.கே.வில் ஷர்துல், ஷாருக்கான்?

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      விளையாட்டு
Shahrukh-Khan 2023 07 04

Source: provided

ஐபிஎல் 2024-ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் டிச.19ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்கள், விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர். முக்கிய வீரர்களான ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்துவீச்சாளர்கள் டுவைன் பிரிடோரியஸ், சிசண்டா மகாலா, பேட்டர் அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்களை எடுக்கும் முனைப்பில் சென்னை அணி உள்ளது. இந்த வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.32.1 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. இந்த தொகை மூலம் ஏலத்தில் குறைந்தது மூன்று வீரர்களை அதிக விலைக்கு எடுக்க சென்னை அணி முன்வரும். 

இதில், மொத்தம் 3 வெளிநாட்டு வீரர்களை சென்னை அணி தேர்வு செய்து கொள்ள முடியும் என்பதால் டிம் செளதி, ஜோ ரூட், பேட் கம்மின்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களில் ஒருவர் தேர்வு செய்ய சென்னை நிர்வாகம் கடுமையாக போட்டியிடும். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சென்னை வீரர் ஷர்துல் தாக்குரை மீண்டும் அணியில் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், கடந்த 2022 ஐபிஎல் ஏலத்தின் போது தமிழக வீரர் ஷாருக்கானை எடுக்க சென்னை அணி கடுமையாக கடைசி வரை போராடியது. அவரை தற்போது பஞ்சாப் அணி விடுவித்துள்ள நிலையில், மினி ஏலத்தில் அவரை எடுக்க சென்னை அணி நிர்வாகம் முனைப்பு காட்ட அதிக வாய்ப்புள்ளது.

______________

 

ருதுராஜ் கெய்ட்வாட் சாதனை

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 222 குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் (13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்) குவித்து சர்வதேச டி20-யில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த 2-வது வீரர் (ஷுப்மன் கில் 126 முதலிடம்), கடைசி 3 ஓவர்களில் அதிகபட்ச ரன்கள்(52) எடுத்த இரண்டாவது வீரர் (யுவராஜ் சிங் 54 முதலிடம்) என்ற சாதனைகளை படைத்தார்.

______________

தரவரிசையில் ஷீதல் நம்பர் ஒன் 

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெண்களுக்கான காம்பவுண்ட் ஓபன் பிரிவில் 16 வயதான இந்திய வீராங்கனை ஷீதல் தேவி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 2 தங்கப்பதக்கங்கள் வென்றதன் மூலம் அவர் 2 இடங்கள் முன்னேறி 'நம்பர் ஒன்' இடத்தை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து