முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      இந்தியா
Balar 2023-09-25

Source: provided

கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளத்தில் சிக்கி 46  பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் 77 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 பேரின் உடல்கள், அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.  

இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  77 பேரை  தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக  நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் எனவும் சிக்கிம் தலைமைச் செயலாளர் விபி பதாக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும்  நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து