முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      உலகம்
Philippines-1 2023-12-03

Source: provided

மிண்டானோ : பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் நேற்று 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 63 கிமீ ஆழத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த விவரம்  வெளியாகவில்லை.

கடந்த மாத தொடக்கத்தில், தெற்கு பிலிப்பைன்ஸில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 17 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாரங்கனி, தெற்கு கோடாபாடோ மற்றும் டாவோ ஒக்சிடென்டல் மாகாணங்களில் இறப்புகள் பதிவாகின. 

அதே நேரத்தில் 13 பேர் காயமடைந்தனர். இது ஏராளமான மக்களை பீதிக்குள்ளாக்கியது மற்றும் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமானது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து