முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      உலகம்
US-2023-12-07

நியூயார்க், அமெரிக்க பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில்  உள்ள நெவாடா பல்கலைக் கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்த  துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஒருவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு சம்பவம் அறிந்ததும், சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் , கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்களை வெளியேற்றினர். 

அதன் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த போது 3 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததும் , துப்பாக்கி சூடு நடத்தியவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காவல்துறையினரால் சுடப்பட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் நேற்று முன்தினம் முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது. நிறுவனம் அருகே உள்ள சாலைகளையும் போலீசார் மூடினர். 

இந்த சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், திடீரென துப்பாக்கி சூடு சட்டம் கேட்டது. குண்டுகள் பாய்ந்த சத்தம் கேட்டதும் நாங்கள் பாதுக்காப்பான இடத்தை நோக்கி ஓடினோம் என தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து