முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் மண்டல பூஜை: ஐயப்பனுக்கு 26-ம் தேதி தங்க அங்கி அணிவிப்பு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      ஆன்மிகம்
Sabarimala 2023-12-02

Source: provided

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 27-ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்னோடியாக 26-ம் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. 

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ம் தேதி நடக்கிறது. 

மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ம் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ம் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

வரும் 27-ம் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ம் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ம் தேதி நடைபெறும். 

அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள். 

இந்த நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று முன்தினம் வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

கூட்ட நெரிசல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர். சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து