முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசாவில் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.250 கோடி பறிமுதல்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Income-Tax 1

Source: provided

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தின் சாம்பல்பூர், போலன்கிர், திடிலாகர் பௌத், சுந்தர்கர், ரூர்கேலா மற்றும் புவனேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள், தொழிற்சாலைகளில் வருமான வரித் துறை புதன்கிழமை முதல் சோதனை நடத்தியது.  வரி ஏய்ப்பு குற்றச்சாட்டப்பட்டுள்ள நிறுவனம், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், ஜார்கண்டில் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. 

போலன்கிர் மாவட்டத்தின் சுடாபடா பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனையில் 156 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.220 கோடி ரொக்கம் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற  வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் வராத கருப்புப் பணத்தின் மதிப்பு, ரூ.290 கோடியை தாண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித் துறை உள்ளிட்ட சோதனை முகமைகளால், ஒரேகட்ட சோதனையின்போது  பறிமுதல் செய்யப்பட்டுள்ள அதிகபட்ச கருப்புப் பணம்  இதுவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகையை கணக்கிடும் பணியில்  40 பணம் எண்ணும் இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக கூடுதலாக வங்கி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை எடுத்துச்செல்ல கூடுதல் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம்  வருமான வரித்துறை சோதனையை  வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து