முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை போட்டி: இந்திய அணியின் தலைமைக்கு ரோகித் சரியான தேர்வு: கங்குலி

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை வழிநடத்த ரோகித் சர்மாதான் சரியான தேர்வு என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

20 அணிகள்...

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு ஏ-ல் இந்தியா...

அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

சரியான தேர்வு.... 

இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மாதான் இந்திய அணியை வழிநடத்துவார் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை தலைமை தாங்குவதற்கு ரோகித் சர்மாதான் சரியான தேர்வு என இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, டி20 உலகக்கோப்பைக்கான இந்திய கேப்டனாக செயல்பட ரோகித் சர்மாதான் சரியான தேர்வு. நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்தி 10 போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் இன்னும் நம் நினைவில் உள்ளது. எனவே, ரோகித் சிறந்த தேர்வாக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து