முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Aravinf-Kejriva

Source: provided

புதுடெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது. 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்,  100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை 6 முறை சம்மன் அனுப்பியது.  ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் 6 முறையும் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார்.   இந்த நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து