முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி மார்ச் 6-ல் மேற்கு வங்கம் பயணம்

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Modi 2023-05-10

Source: provided

புதுடெல்லி:மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் நகரில் மார்ச் 6-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், தொடர்ந்து சந்தேஷ்காலியில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திரிணமூல் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் - இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சந்தேஷ்காலி விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக களத்தில் இறங்கி போராடி வருகிறது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிப்ரவரி 28-ம் தேதி மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

மேலும், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பராசத்தில் நகரில் மார்ச் 6 ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றுவார் என்றும், சந்தேஷ்காலியில் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் அம்மாநிலத்தின் பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், “திரிணமுல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களிடம் நாங்கள் பேசுவோம். அந்த சகோதரிகள், தாய்மார்கள் பிரதமரை சந்திக்க விரும்பினால், நாங்கள் அவரைக் காண ஏற்பாடு செய்வோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து