முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னிபாத்” மூலம் இளைஞர்களுக்கு அநீதி: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      இந்தியா
karke 2023-08-10

Source: provided

புதுடெல்லி : “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தை தனது எக்ஸ் தள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.  அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., “இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை முன்னிலைப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.  பெரும்பான்மையான அக்னிவீரர்கள் நான்கு வருட சேவைக்குப் பிறகு வேலையில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும்.  இது அவர்களின் பொருளாதார நிலையை பாதிக்கும். “அக்னிபாத்” திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது.

கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிட்டது.  தற்கொலை செய்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது.  தேசபக்தி மற்றும் வீரம் நிறைந்த ஆயுதப் படைவீர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.  எங்கள் இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. நியாயம் மற்றும் நீதியை உறுதிப்படுத்துமாறு நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” இவ்வாறு அந்த கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து