முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல்: கேரளாவில் காங். 16 இடங்களில் போட்டி : கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
congress-office

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தொகுதி பங்கீட்டில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. ஆளும் பா.ஜ.க. ஒருபுறமும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மறுபுறமும் இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் கேரளாவில், மக்களவை தேர்தலுக்கான போட்டியில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  இதனை கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான வி.டி. சதீசன் நேற்று தெரிவித்தார். 

இது பற்றி செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது, 

கேரளாவில் 20 மக்களவை தொகுதிகளுக்கான போட்டியில் 16 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும்.  கூட்டணியில் 2-வது பெரிய கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்களும், கே.சி.ஜே. (ஜே.) மற்றும் ஆர்.எஸ்.பி. ஆகிய இரு கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சமீபத்தில், இந்த முறை தேர்தலில் கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டு பெறுவோம் என கூறியிருந்தது.  இந்த முடிவில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்றும் தெரிவித்து இருந்தது. எனினும், இந்த விவகாரம் ஆலோசனை நடத்தி தீர்க்கப்பட்டு விட்டது என சதீசன் கூறினார்.  

இதற்கு பதிலாக, ராஜ்யசபைக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பழம்பெரும் தலைவரான முகமது பஷீர் மலப்புரம் தொகுதியில் இருந்தும், மக்களவை எம்.பி.யாக பதவி வகித்து வரும் அப்துல் சமது சமதனி பொன்னானி தொகுதியில் இருந்தும் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவரான பாலக்காடு சாதிக் அலி ஷிஹாப் தங்கல் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து