முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தம் இன்றி முத்தம் தா விமர்சனம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      சினிமா
Silent-Kiss-Tha-Review 2024

Source: provided

ராஜ் தேவ் அவர்களின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஷ் பேராடி, வியான், நிஹாரிகா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ”சத்தம் இன்றி முத்தம் தா”.

படத்தின் ஆரம்பத்திலேயே நாயகி பிரியங்கா திம்மேஷை கொலை செய்ய ஒருவர் விரட்டுகிறார். வீட்டிலிருந்து தப்பித்து வெளியே ஓடிச் செல்லும் பிரியங்காவை கார் ஒன்று அடித்து விடுகிறது. இதனால் தூக்கி வீசப்படும் பிரியங்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

பழைய நினைவுகள் அனைத்தையும் இழந்து விடுகிறார் பிரியங்கா. அதன்பிறகு, நான்தான் உன் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார் ஸ்ரீகாந்த்.

பின் இருவரும் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு சில காலம் ஓய்வெடுக்கிறார் பிரியங்கா. இப்படியாக செல்லும் போது, அவ்வப்போது ஸ்ரீகாந்த் சிலரை கொடூரமாக கொன்று வருகிறார். பிரியங்காவின் கண்முன்னே இருவரை கொல்கிறார்.

வாழ்க்கை வெறுத்துப் போனது போல் இருக்கும் ப்ரியங்காவிற்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது.

அடுத்து என்ன நடந்தது.? ஸ்ரீகாந்த் யார்.? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதுவரை ஏற்றிறாத கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். 

நாயகி பிரியங்கா தான் படத்தின் மையக்கருவாக வந்து நிற்கிறார். காதல், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாக்களிலும் அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறார்.

விடுமுறையை கொண்டாட சரியான படைப்பாக வந்திருக்கும் “சத்தமின்றி முத்தம் தா” படத்தை நிச்சயமாக ஒருமுறை பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து