முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பஸ் கவிழந்து விபத்து: தமிழகத்தை சேர்ந்த இருவர் பலி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Karala 2024-04-13

Source: provided

இடுக்கி : கேரளாவிற்கு சுற்றுலா சென்ற போது பஸ் கவிழ்ந்த விபத்தில் சிவகங்கையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அண்டை மாநிலமான கேரளாவிற்கு சிவகங்கையை சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் பேருந்தில் சுற்றுலா சென்றனர். அப்போது உடும்பஞ்சோலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. 

இதனால் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த உள்ளூர்வாசிகள், உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ரஜீனா (20) மற்றும் சனா (7) ஆகிய இருவர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து