முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      சினிமா
Gun 2023-10-05

Source: provided

மும்பை : மும்பையில் நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு அதிகாலையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

அதிகாலை 4.55 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை பிடிக்க போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். சல்மான் கான் வீட்டின் முன்பு நடந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கியால் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிடைத்த தகவலின்படி, பைக்கில் 2 பேர் தாக்குதல் நடத்தினர். போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அதிகாலை 4.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சல்மான் கானுக்கு இதற்கு முன் பலமுறை கொலை மிரட்டல் வந்துள்ளது.

பிரபல கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான்கானை கொலை செய்வதாக பலமுறை மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு தொலைக்காட்சி பேட்டியில், சல்மான்கானை கொல்வதே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்று வெளிப்படையாக கூறினார். 

கனடாவில் உள்ள நடிகர், பாடகர் ஜிப்பி கிரேவாலின் இல்லத்தையும் அவர் தாக்கினார்.  மேலும் சல்மான்கானுடனான நெருங்கிய உறவின் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறினார். லாரன்ஸ் பிஷ்னோயின் மிரட்டலுக்குப் பிறகு, சல்மான் கானின் பாதுகாப்பை மும்பை போலீசார் ஆய்வு செய்தனர்.

சல்மான்கானுக்கு தற்போது ஒய்.பிளஸ் பாதுகாப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சல்மான்கானின் அலுவலகத்துக்கும் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சல்மானின் நெருங்கிய நண்பர் பிரசாந்த் குஞ்சல்கருக்கு ரோஹித் கார்க்கிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்தது. மின்னஞ்சல் வழக்கில் 506 (2), 120 (b) மற்றும் 34 ஐபிசியின் கீழ் குண்டர்கள் லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி ப்ரார் மற்றும் ரோஹித் கார்க் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து