Idhayam Matrimony

இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்

திங்கட்கிழமை, 27 அக்டோபர் 2025      சினிமா
Aryan 2025-10-27

Source: provided

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க,  பிரவீன்.கே இயக்கத்தில்,  விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர்யன். ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால், மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி, சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இப்படம் வரும் அக்டோபர் 31 அன்று வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது. விழாவில் விஷ்ணு விஷால் பேசுகையில். கிரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால் நாங்கள் வேறொரு அனுபவத்தை இப்படத்தில்  தர முயற்சி செய்துள்ளோம் என்றார். படத்தின்  இயக்குநர் பிரவீன்.கே பேசுகையில், இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததுதான். அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் உங்களுக்கு சிறப்பான அனுபவத்தைத் தரும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து