Idhayam Matrimony

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் சரிவு

புதன்கிழமை, 5 நவம்பர் 2025      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, தங்கம் விலை நேற்றும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,180-க்கும், சவரன் ரூ.89,440-க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்து விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. பின்னர் மளமளவென சரிந்தது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல், ஏற்ற-இறக்கத்துடனேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 1-ந்தேதி முதல் விலை உயர்ந்து வந்து, நேற்று குறைந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 250-க்கும், ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

தொடர்ந்து விலை அதிகரித்து, பின்னர் குறைந்து கடந்த 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் வந்து மீண்டும் ஏற்றம் கண்டது. அதேபோல் தற்போது விலை சரிந்து, ரூ.90 ஆயிரத்துக்கு வந்துள்ளது. வரும் நாட்களிலும் மேலும் குறையுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. வெள்ளி விலையும், தங்கம் விலையை போலவே ஏறுவதும், இறங்குவதுமான சூழல் நிலவுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,180-க்கும், சவரன் ரூ.89,440-க்கும் விற்பனையானது. அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்து விற்பனையானது. இதன்படி வெள்ளிவிலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.163க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 13 hours ago
View all comments

வாசகர் கருத்து