முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் பலம் குறித்து பாடம் கற்பிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      தமிழகம்      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, அ.தி.மு.க.வின் ஆற்றல் மற்றும் தொண்டர் பலம் குறித்து பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் பா.ஜ.க. களமிறங்கியுள்ளது. அ.தி.மு.க. குறித்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. அ.தி.மு.க.வை பிளவுபடுத்த பா.ஜ.க. எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து ஒன்றுபட்டு வலுவாக நிற்கிறோம்.

வன்முறை வெறியாட்டம், வடக்கே இருந்து ஏவும் விஷ அம்புகள் அனைத்தும் ஆளும் கட்சியின் அதிகார மமதை. இது போன்ற கோழைத்தனங்களை தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம். சில திடீர் தலைவர்களை பா.ஜ.க. ஊக்குவிக்கிறது, அதன்மூலம் அ.தி.மு.க.வை சீண்டுகிறது. அ.தி.மு.க. ஆற்றல், தொண்டர் பலம் பற்றி பா.ஜ.க.வு நாம் பாடம் கற்பிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து