முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      உலகம்
Suicide 2023 04 29

லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர். 

ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு கடந்த  17-ம் தேதி மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். 

அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக் கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவர்கள் மறைவு குறித்த் தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக் கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து