முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச்சு: பிரதமருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்., புகார்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2024      இந்தியா
Modi 2023 07 30

புதுடில்லி, ராஜஸ்தானில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாரளித்துள்ளது.

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் (ஏப்.,21) ராஜஸ்தானில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியதாவது: அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள், அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா?

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மத ரீதியாக பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், பிரதமரே மதத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்றும், இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்த நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் இன்று புகாரளித்துள்ளது. பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முறையிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து