முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      தமிழகம்
Smokebiscuits-2024-04-24

சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் நைட்ரஜன் பிஸ்கெட்டுக்கு எதிராக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

திரவ நைட்ரஜனை பிஸ்கெட் உடன் சேர்த்து சாப்பிடும் போது வாய் மற்றும் மூக்கில் இருந்து புகை வரும்.  இதை பொழுதுபோக்கான உணவாக பல்வேறு பொது இடங்களில் மற்றும் சுற்றுலா தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பொருட்காட்சிகளில் நைட்ரஜன் பிஸ்கெட் விற்பனை செய்யப்பட்டுவதை பார்க்க முடிகிறது.  திரவ நிலையில் மைனஸ் 196 செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும் திரவ நைட்ரஜன் பிஸ்கெட்டில் சேர்த்து பயன்படுத்துவது ஆபத்து என்கின்றனர் உணவுத்துறை வல்லுநர்கள்.

பொதுவாக உணவுப் பொருள்களை உறைய வைக்கவே திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதற்கு திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்ததாகவும் உள்ளது.  ஒரே நொடியில் பொருட்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது.  திரவ நைட்ரஜனை சிறிது திரவ நிலையில் எடுத்துக் கொண்டாலும் வயிற்றில் சென்று  ஆவியாகுதல் நடைபெற்று கடும் உடல் உபாதை ஏற்படுத்துவதோடு உயிரிழப்பு ஆபாயமும் ஏற்படும்.

குறைந்த அளவில் திரவ நைட்ரஜனை குறைவாக பயன்படுத்தும் பொழுது எந்த ஆபத்தும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியான  இந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அண்மையில் பஞ்சு மிட்டாயில் உள்ள நிறமி வேதிப்பொருள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அதனை அரசு தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் தயார் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து,  இதன் பாதிப்பை எடுத்துக் கூறி,  சுற்றறிக்கை கொடுக்கவும்,  முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்கக் கூடாது என மாநில அரசின் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு அளித்துள்ளது.  அதனை மீறி விற்பனை செய்யும் உணவு விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து