முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      விளையாட்டு
Suryakumar 2023 08 09

Source: provided

துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

தொடர் சமநிலையில்... 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 பொட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

சூர்யகுமார் யாதவ்... 

டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். 2-வது இடத்தில் பில் சால்ட்டும் (இங்கிலாந்து), 3-வது இடத்தில் முகமது ரிஸ்வானும் (பாகிஸ்தான்) உள்ளனர். இதில் பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டிம் சீபர்ட் (நியூசிலாந்து) 3 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும், மார்க் சாப்மேன் (நியூசிலாந்து) 12 இடங்கள் முன்னேறி 33-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அடில் ரஷித் முதலிடம்...

டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் அடில் ரஷித் முதலிடத்தில் தொடருகிறார். வனிந்து ஹசரங்கா (இலங்கை) 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷாகீன் அப்ரிடி (பாகிஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தை பிடித்துள்ளார். இதே தொடரில் அசத்தி வரும் நியூசிலாந்தின் இஷ் சோதி 5 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து