முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி நிதி: மத்திய அரசுக்கு எதிராக கர்நாடகா சட்டசபைக்கு வெளியே முதல்வர் சித்தராமையா தர்ணா

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2024      இந்தியா
Karnataka-CM-2024-04-28

பெங்களூரு, கர்நாடகாவிற்கு மத்திய அரசு ஒதுக்கிய வறட்சி நிவாரண நிதி போதுமானது அல்ல எனக்கூறி அம்மாநில முதல்வர் சித்தராமையா நேற்று  தர்ணாவில் ஈடுபட்டார்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக கர்நாடக அரசு அறிவித்தது. 

மேலும், வறட்சி, பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக ஏற்பட்ட இழப்பிற்கு 18 ஆயிரத்து 171 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்தது. 

இதனிடையே,  வறட்சி, நிவாரண பணிக்காக கர்நாடகாவுக்கு மத்திய அரசு 3 ஆயிரத்து 454 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசு விடுத்த கோரிக்கை தொகையை விட மிகக்குறைவாகும். 

இந்நிலையில், வறட்சி நிவாரண நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு அநீதி இழைத்துள்ளதாக கூறி கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கைகளில் தண்ணீர்க் குவளையையும், செம்பையும் ஏந்தியபடி அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

முன்னதாக நிருபர்களிடம் சித்தராமையா கூறியதாவது: 

தேசிய பேரிடர் நிவாரண நிதி விதிகளின்படி கர்நாடகாவிற்கு மத்திய அரசு ரூ.18,171 கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், வறட்சி நிவாரண நிதியாக வெறும் ரூ. 3,498 கோடியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கு போதுமானது அல்ல என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து