முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      உலகம்
Colombia 2024-04-30

Source: provided

பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய  விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். 

கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோரா நகராட்சியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. பொருட்களை இறக்கி விட்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. 

இதில், ஹெலிகாப்டரில் இருந்த 9 வீரர்களும்  பலியாகினர். உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் மதியம் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், பின்னர் சாண்டா ரோசா நகராட்சிக்கு அருகில் விபத்துக்குள்ளானது தெரியவந்ததாகவும் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு பொருட்களை வழங்கி விட்டு திரும்பிய போது விபத்து நிகழ்ந்ததாகவும் கூறி உள்ளார். 

சான்டா ரோசா பகுதியில் சமீபத்தில் தேசிய விடுதலை ராணுவத்தின் கொரில்லா குழுவிற்கும் வளைகுடா குலம் எனப்படும் போதைப்பொருள் கடத்தல் குழுவிற்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து