எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லக்னோ : பாராளுமன்ற 5-ம் கட்ட தேர்தல் நடக்கவிருக்கும் 49 தொகுதிகளில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
4 கட்ட தேர்தல் நிறைவு...
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
தீவிர பிரசாரத்தில்...
உத்தரபிரதேசம் (14 தொகுதிகள்), மராட்டியம் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (7 தொகுதிகள்), பீகார் (5 தொகுதிகள்), ஒடிசா (5 தொகுதிகள்) ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), ஜம்மு-காஷ்மீர் (1 தொகுதி), லடாக் (1 தொகுதி) என மொத்தம் 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
695 வேட்பாளர்கள்...
5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்வேறு தொகுதிகளில் விஜபி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார்.
ராஜ்நாத் சிங் போட்டி...
உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார். பீகாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பிஹாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.
பியூஷ் கோயல் போட்டி...
மும்பை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பூஷண் பாட்டீல் போட்டியிடுகிறார். ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மக்களவைத் தொகுதியில் தேசிய மாநாடு கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பயாஸ் அகமது மிர் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை.
நடத்தை விதிகள் அமல்...
இந்நிலையில், பாராளுமன்ற 5ம் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 5ம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அடத்ததாக 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
14 Jun 2025துபாய் : துபாயில் உள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பு உள்ளது இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு 274 ஆக உயர்வு
14 Jun 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரதமரின் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
14 Jun 2025சென்னை, வீடு வழங்கும் திட்டம், மீன்வளத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பிரதமர் முகத்தைத் தாங்கி செயல்படும் திட்டத்துக்கு அதிகம் படியளப்பது மாநில அரசுதான் என முதல்வர் மு.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-06-2025.
14 Jun 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
14 Jun 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ரூ.74 ஆயிரத்து 360-க்கு விற்பனை ஆன நிலையில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது.&nbs
-
முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி
14 Jun 2025சென்னை : உயர்கல்விக்கு உதவிடும் வகையில் மடிக்கணினி வழங்கி, மேலும் வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையையும் வழங்கிய முதல்வருக்கு பழங்குடியின மாணவி ஆ.ராஜேஸ்வரி நன்றி தெரிவித்த
-
ஏவுகணை வீசினால் தெஹ்ரான் எரியும்: ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
14 Jun 2025டெல் அவிவ் : ஏவுகனணகளை வீசினால் தெஹ்ரான் எரியும் என்று ஈரானுக்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
-
ஒடிசா: பாதுகாப்புப்படை வீரர் பலி
14 Jun 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் நக்தலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் கண்ணி வெடியில் சிக்கி பாதுகாப்புப்படை வீரர் பலியானார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
14 Jun 2025டெஹ்ரான் :: ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருவதை முன்னிட்டு இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
14 Jun 2025தென்காசி, குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்
14 Jun 2025இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
-
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
14 Jun 2025சென்னை, முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
விசைப்படகுகளுக்கு விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு
14 Jun 2025சென்னை, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவா்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவா்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனா்.
-
நீட் தேர்வு முடிவு வெளியீடு: தமிழ்நாட்டில் 76,181 மாணவர்கள் தேர்ச்சி
14 Jun 2025சென்னை, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் நேற்று வெளியிடப்பட்டது.
-
ஈரான் ஏவுகணை தாக்குதல்: இஸ்ரேலில் 3 பேர் பலி
14 Jun 2025ஜெருசலேம் : இஸ்லே் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனில் தொடர் தாக்குதல்: மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றிய ரஷ்யா
14 Jun 2025மாஸ்கோ : உக்ரைனில் தொடர் தாக்குதல் நடந்து வருவதை முன்னிட்டு மேலும் ஒரு கிராமத்தை கைப்பற்றியது ரஷ்யா.
-
10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றி - ஒரு டிரா: ஆதிக்கம் செலுத்தும் பவுமா
14 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
-
நீலகிரிக்கு இன்றும் ‘ரெட் அலர்ட்’ 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
14 Jun 2025சென்னை, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னி
-
சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது
14 Jun 2025சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி.
-
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு: மொத்தம் 210 வேலை நாட்கள்
14 Jun 2025சென்னை, நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Jun 2025சென்னை : காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்து: 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருத்தம்
14 Jun 2025காந்திநகர் : 6 பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறவினர்களுடன் பொருந்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டி.என்.ஏ.
-
காவல் நிலையம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
14 Jun 2025சென்னை, வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅதி.மு.க.
-
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி
14 Jun 2025திருச்சி : வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க. சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
-
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து கார்கே ஆறுதல்
14 Jun 2025காந்திநகர் : விமான விபத்தில் காயமடைந்தவர்களை காங்கிரஸ் தலைவர் கார்கே நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.