முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறுகளை சரிசெய்து முன்னேற வேண்டும் : ரோகித் சர்மா பேட்டி

சனிக்கிழமை, 18 மே 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் தான் சரியாக விளையாடவில்லை என தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அணிக்கு புதிய கேப்டன்...

இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மாவுக்குப் பதிலாக, ஹார்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக மும்பை அணி நிர்வாகம் நியமித்தது. அணியில் ஒரு வீரராக பங்கேற்று விளையாடிய ரோகித் சர்மா, நடப்பு ஐ.பி.எல். தொடரின் இரண்டாவது பாதியில் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. கடந்த 6 போட்டிகளில் அவர் 20 ரன்களைக் கூட குவிக்கவில்லை.

தவறுகளை சரிசெய்து... 

இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் தான் சரியாக விளையாடவில்லை எனவும், அதனை நினைத்து அதிகம் யோசிக்காமல் தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும் எனவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு பேட்ஸ்மேனாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக விளையாடிய பிறகும் போட்டிகளில் சரியாக விளையாடாததை நினைத்து அதிகம் யோசித்தால், என்னால் இனிவரும் போட்டிகளிலும் நன்றாக விளையாட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். சரியான மனநிலையில் இருக்க முயற்சி செய்கிறேன்.

முன்னேற விருப்பம்... 

நடப்பு ஐ.பி.எல். தொடரில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு முன்னேற விரும்புகிறேன். நடப்பு ஐ.பி.எல். தொடர் எங்களது திட்டப்படி செல்லவில்லை. அதற்கு எங்களை நாங்களேதான் குறை கூறிக் கொள்ள வேண்டும். இந்த ஐ.பி.எல். தொடரில் அளவுக்கு அதிகமான தவறுகளை செய்துவிட்டோம். நிறைய போட்டிகளில் தோற்றுவிட்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து