முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Rain 2023 07-09

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி உள்பட, ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இதே நிலைமை தொடருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தர பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்தின் வடக்கு பகுதிகளிலும் அடுத்த 4 நாள்களுக்கு வெப்ப அலை வீசக்கூடுமென ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 18-ம் தேதி அன்று ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத்தில் ஒருசில பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் வெப்பம் பதிவாகியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். உச்சபட்சமாக, ராஜஸ்தானின் பார்மரிலும், உத்தர பிரதேசத்தின் கான்பூரிலும் 46.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து