எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சாத்விக்- சிராக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
_______________________________________________________
டோனி குறித்து ஜெயக்குமார்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னையை வீழ்த்திய பெங்களூரு அணி ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சென்னை அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. சென்னை அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 3-வது முறையாகும். டோனி குறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த டோனியை பார்த்தவுடன் இதுதான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்! ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்! சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! நன்றி டோனி! என பதிவிட்டுள்ளார்.
_______________________________________________________
உணர்ச்சிவசப்பட்ட கோலி, அனுஷ்கா
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி செல்கிறது. பிளே-ஆப் சுற்றில் இடம் பெறும் 4 அணிக்கான தரவரிசையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 3 அணிகள் முன்பே தகுதி பெற்று இடம் பிடித்து விட்டன. இதனால், மீதமுள்ள 4-வது இடம் யாருக்கு என நிர்ணயிக்கும் 68-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனை அடுத்து போட்டி முடிந்ததும், பெங்களூரு அணி வீரர்கள், நிர்வாகத்தினர், ரசிகர்கள் என பலரும் மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த அணியின் வீரரான விராட் கோலி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். போட்டியில் வெற்றி பெற்றது தெரிந்ததும், களத்திற்குள் ஓடி சென்று சக வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அவருடைய மனைவி அனுஷ்கா சர்மாவும் பார்வையாளர்கள் வரிசையில் நின்றபடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.
_______________________________________________________
ஸ்காட்லாந்து அணி ஜெர்சியில்....
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன. டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் மற்றும் அணியின் சீருடையை (ஜெர்சி) ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன. சமீபத்தில் நீலத்துடன் காவி நிறம் இடம்பெற்ற புதிய அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணியின் சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு பொறிக்கப்பட்டுள்ளது.
பக்கத்து மாநிலமான கர்நாடக மாநில அரசின் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான நந்தினி, வெளிநாடுகளிலும் தங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில் கால்பதித்துள்ள நந்தினி நிறுவனம், அந்நாட்டின் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அணி விளம்பரதாரராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணி அறிமுகம் செய்துள்ள தங்களது அணியின் சீருடையில் நந்தினி பால் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
_______________________________________________________
வெற்றி குறித்து தினேஷ் கார்த்திக்
பெங்களூருக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. எம்.எஸ் டோனியின் கடைசி சீசன் என்பதால் ஒரு பக்கம் டோனி வெற்றி பெற வேண்டும் எனவும் , மறுபுறம் கோலி வெற்றி பெற வேண்டும் எனவும் உணர்ச்சி பொங்க மைதானம் காட்சியளித்தது. போட்டியின் இறுதியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
ஆனால் மறுபுறம் ‘தல’யின் அணி தோல்வியை தழுவியது. இது கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் இந்த முறை பெங்களூரு அணி இறுதிச்சுற்றில் வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் கூறியுள்ளதாவது; “சி.எஸ்.கே. அணிக்கு எதிரான போட்டியில் எங்களுக்கு சாதகமாக நிகழ்ந்த விஷயம் டோனி அடித்த அந்த 110 மீ சிக்ஸர் தான். அந்த பந்து மைதானத்துக்கு வெளியே போனதால் தான் புதிய பந்து கிடைத்து பந்துவீச சுலபமாக இருந்தது. அது தான் நமது வெற்றியை எளிதாக்கியது” என தெரிவித்துள்ளார்.
_______________________________________________________
டோனியால் வெடித்த சர்ச்சை
போட்டி முடிந்ததும் களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களுக்கு பெவிலியனில் இருக்கும் வீரர்கள் கைகொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் ஆர்சிபி வெற்றி பெற்றவுடன் களத்தில் இருந்து பெவிலியன் வந்த ஆர்சிபி வீர்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் கைகொடுக்க காத்திருந்தினர். அப்போது அதில் முதல் ஆளாக நின்றுகொண்டிருந்த டோனி ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல், அங்கிருந்த அந்த அணியின் மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு கைகொடுத்துவிட்டு சென்றார். இந்த விடியோ இணையளதங்களில் வைரலாகி வருவதோடு டோனியில் இந்த செயலை பல்வேறு தரப்பினர் விமர்சித்தும் வருகின்றனர்.
_______________________________________________________
டோனி குறித்து சுரேஷ் ரெய்னா
ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.
_______________________________________________________
யாஷ் தயாளுக்கு பாராட்டு
சென்னைக்க எதிரான போட்டியில் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டூ பிளசிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது அவர் கூறியதாவது: லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. கடந்த 6 போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது.
இலக்கு சற்று நெருக்கமாக இருந்தபோது டோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்ப முடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர். கடைசி ஓவர் வீசுவதற்கு முன் பந்தில் அதிகம் பேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது. எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
13 Oct 2025சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.