முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      தமிழகம்
TN 2024-05-19

Source: provided

நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. 

கடந்த 15-ம் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று  அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ம்  தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.  நேற்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

இதே போல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது. 

தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும். தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.  கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர். 

வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து