முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உச்சம் தொட்டது: ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது : வெள்ளி விலையும் கடும் உயர்வு - பெண்கள், நகை பிரியர்கள் அதிர்ச்சி

திங்கட்கிழமை, 20 மே 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்ததால் பெண்கள் - நகைபிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ கடந்து நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டது. சென்னையில் நேற்று, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கும் விற்பனையானது. இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூ.100-ஐ கடந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.101.00-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து